திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 42 பன்றிகள் பிடிபட்டன

பதிவு:2022-07-03 13:45:00

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 42 பன்றிகள் பிடிபட்டன

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 42 பன்றிகள் பிடிபட்டன

திருவள்ளூர் ஜூலை 04 : திருவள்ளூர் நகராட்சி சாதாரண கூட்டம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது பேசிய வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடனே சாலையில்நடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்று புகார் தெரிவித்தனர். இதற்கு நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

அதனையடுத்து நேற்று நகராட்சி ஆணையர் க.ராஜலட்சமி உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுதர்சன், களப்பணியாளர் கண்ணன் முன்னிலையில் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், பேருந்து நிலையம் அருகில், 11-வது வார்டு மற்றும் 1,4,27 ஆகிய வார்டுகளிலும் சாலையில் சுற்றித்திரிந்த பன்றிகளை வலையை வீசி பிடித்தனர். 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் 42 பன்றிகள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

தொடர்ந்து பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,ன்றி வளர்ப்போருக்கு இது சம்மந்தமாக நோட்டிஸ் வழங்கப்பட்டதாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரிந்தால் பன்றிகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கப்படும் எனவும் எச்சரித்து இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.