பதிவு:2022-07-03 13:48:48
செவ்வாப்பேட்டையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கை தொடக்கம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் கடந்த 2018-2019-ம் கல்வியாண்டு முதல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவக்கப்பட்டு இயங்கி வருகிறது.இக்கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைகைக்கான விண்ணப்பங்கள் (ஆன்லைன்) http://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியானது (TNEA Facilitation Centre) ஆக செயல்பட்டு வருகிறது. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் இவ்வலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு எஸ்எஸ்எல்சி படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மற்றும் ஐடிஐ படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினர் ரூ. 150-ம் ஆதிதிராவிடர் எஸ்.சி மற்றும் பழங்குடியினர் (எஸ் டி) பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்பிற்கான இணையதள வாயிலாக ( ஆன்லைன்) விண்ணப்ப பதிவு கடந்த 23.06.2022 அன்று பதிவு செய்ய தொடங்கியது.
அதே போல் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பிற்கான இணையதள வாயிலாக (ஆன்லைன்) விண்ணப்ப பதிவு செய்ய இறுதி நாள் 08.07.2022 என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.