பதிவு:2022-07-03 13:50:51
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அதிக வட்டி மற்றும் தங்க காசு தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.86 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார்
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அச்சரம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி டி.உமா (45). விவசாய கூலித் தொழிலாளியான உமா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி ஆகியோரிடம் கடந்த 2021 மார்ச் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் ஜி.ஆனந்த் என்பவர் ரி பார்ன் எக்ஸ் என்ற ஆன்லைன் மூலம் பிட் காய்ன் வியாபாரம் செய்வதாக சொல்லி அறிமுகமாகியுள்ளார்.
ஆனந்த என்பவர் சொன்னைதை கேட்டும் அவர் கொடுத்திருந்த விளம்பரத்தையும் நம்பி ஏமாந்ததாக கூறப்படுகிறது.அதாவது ஒரு லட்சம் கட்டினால் மாதம் 10 ஆயிரம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி அச்சரம்பள்ளம் கிராமத்தைச் உமா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி ஆகியோர் ஊர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வாங்கி ஆனந்திடம் கட்டியுளளனர். 5 ஆயிரம் 10 ஆயிரம் என கட்டி வந்த மக்களுக்கு வட்டித் தொகையை மாதம்தோறும் வழங்கியதால் அதனை நம்பிய கிராம மக்கள் பெரும்பாலானோர் லட்சக்கணக்கில் பணம் கட்ட தொடங்கினர்.
கிட்டத்தட்ட 86 லட்சம் ரூபாய் வரை சேர்ந்த நிலையில் வட்டி தருவதாக சொல்லி வந்தவர் தங்க காசு தருவதாகவும் சொல்லி பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. பணம் கேட்டதற்கு அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே 86 லட்சம் ரூபாயை ஊர் மக்களிடம் வாங்கி கொடுத்ததை மோசடி செய்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.