திருத்தணி அடுத்த ஆர் கே பேட்டை பெண் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ மற்றும் 10 பெண் காவலர்களை கற்களால் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-07-03 13:52:52

திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் பகுதியில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை அளந்து கொடுக்க சென்ற பெண் தாசில்தார் தமயந்தி, வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி , கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த பெண் காவலர்கள் 10 பேரை சில நபர்கள் கற்களை கொண்டு தாக்கினர்.

மேலும் பெண் ஆய்வாளருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் வருவாய் துறையைச் சேர்ந்த இரு பெண் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் மாநில பொருளாளர் இளங்கோவன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் காந்திமதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பெண் வட்டாட்சியர் தமயந்தி, வருவாய் பெண் ஆய்வாளர் ஜெயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் காவலர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், மற்றும் செல்வம் உள்ளிட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதே போல் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பொருளாளரும், திருத்தணி தாசில்தாருமான வெண்ணிலா தலைமையில், 25- க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வருவாய் துறை பெண் அலுவலர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.