பதிவு:2022-07-03 13:54:38
திருவள்ளூர் அருகே கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவரை கடந்த 11-ம் தேதி மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
எனவே தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட ஆட்சியருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் தினேஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை மணவாள நகர் போலீசார் புழல் சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.