திருவள்ளூரில் உள்ள அன்னை ஸ்ரீமகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா

பதிவு:2022-07-04 16:10:16

திருவள்ளூரில் உள்ள அன்னை ஸ்ரீமகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா

திருவள்ளூரில் உள்ள அன்னை ஸ்ரீமகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா

திருவள்ளூர் ஜூலை 04 : திருவள்ளூர் வி.எஸ்.நகர் ஐவேலி அகரத்தில் உள்ளது அன்னை ஸ்ரீமகா பிரத்யங்கிரா தேவி கோயில். இந்த கோயிலில் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.3 நாட்கள் நடைபெற்ற ஆனித்திருவிழா வின் முதல் நாளான கடந்த 1-ந் தேதி வெள்ளிக் கிழமை பால் குட ஊர்வலம் மற்றும் மகா தீபாராதனையும் மாலை திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. <><> அதனைத் தொடர்ந்து 2-ம் நாளான சனிக்கிழமை மகா பூர்ணாஹூதி மகா தீபாராதனையும், மாலை பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் அலகு தரித்து ஊர்வலமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை கலசாபிஷேகமும், அம்மனை வர்ணித்து கூழ் அமுது படைத்தலும் நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து இரவு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பதால் தீமிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்த போது சிலம்ப கலை நிகழச்சியும் நடைபெற்றது. இதில் ஐவேலி அகரம், தலக்காஞ்சேரி, திருவள்ளூர், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.