பதிவு:2022-07-04 16:12:33
திருத்தணி அருகே கொண்டாரெட்டி சாதி சான்றிதழ் கேட்டு கிடைக்காததால் 82 வயது முதியவர் பள்ளிப்பட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் ஜூலை 04 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கீளபூடி, பாண்டிரவேடு, அகூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாரெட்டி இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் 11 கிராமங்களில் வசித்து வருகின்றனர். இதில் பள்ளிப்பட்டு அடுத்த கீளபூடி கிராமத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஜி.எம்.பெரியசாமி ரெட்டி என்பவர் கொண்டாரெட்டி இன மக்களுக்காக வருவாய் துறையில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்கள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை சாதி சான்றிதழ் கேட்டு கிடைக்காததால் கடந்த 38 ஆண்டு காலமாக பல கட்டமாக போராட்டம் நடத்தி வந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 11-10-2021 அன்று நடைபெற்ற உண்ணாவிரத காத்திருப்போர் போராட்டத்தின் போது முதியவர் ஜி.எம். பெரியசாமி ரெட்டி. தன் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு நமது இன மக்களுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தார். தன் இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மேலும். மன உளைச்சலில் இருந்த முதியவர் நேற்று இரவு பள்ளிப்பட்டு தாலுக்கா அலுவலகம் முன்பு கயிற்றால் தூக்கு மாட்டி தன் உயிரை மாய்த்து கொண்டார்.
மலைவாழ் மக்களுக்கு கொண்டாரெட்டி சாதி சான்றிதழ் கிடைக்கவில்லையே என்ற மன விரக்தியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதி சான்றிதழ் கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பள்ளிப்பட்டு போலிசார் பிரேதத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.