பதிவு:2022-07-05 16:09:55
ஆவடி மாநகராட்சி கட்டிடடத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வரும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அவரது மகன் எஸ்.என்.ஆசிம் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் புகார் மனு
திருவள்ளூர் ஜூலை 05 : அதிமுக முன்னாள் அமைச்சரும், சிறுபான்மை பிரிவு இணை செயலாளருமான எஸ்.அப்துல் ரஹீம் ஏற்பாட்டில் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் அதிமுகவினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக பால்வளத்துறை அமைச்சராகவும் இருப்பவர் சா.மு.நாசர், இவரது மகன் எஸ்.எம்.ஆசிம் திமுக திருவள்ளூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், ஆவடி மாநகராட்சியின்4-வது வார்டு உறுப்பினராகவும் இருக்கிறார்.
ஆவடி நகராட்சி அலுவலக கட்டிடம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகே அலுவலகத்தில் இடப் பற்றாக்குறையாக உள்ள நிலையில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தனியாக இருந்தும் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு அறையை ஒதுக்கி கொண்டுள்ளார். திமுக எம்எல்ஏ., ஆவடி சா.மு.நாசர், இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி திமுக மாவட்ட தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டத்தை மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் அமைச்சர் மகன் எஸ்.என். ஆசிம் நடத்தியுள்ளார்.
கட்சி கூட்டத்தை மாநகராட்சி கூட்டத்தில் நடத்தியது சட்டவிரோதமானது என்பதால் அமைச்சர் நாசர் மற்றும் அவரது மகன் எஸ்.என். ஆசிம் ஆகியோர் மீது மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் 11-ந்தேதிக்குப் பிறகு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அதிமுகவினர் தெரிவித்தனர்.