ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தலைவர் போல் செயல்படுவதாகவும், தனியார் தொழிற்சாலை ஒப்பந்த பணிகளிலும் தலையிட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டி பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார்

பதிவு:2022-07-05 16:18:15

திருவள்ளூர் ஜூலை 05 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், விஷ்ணுவாக்கம் ஊராட்சி பேரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நேரில் புகார் மனு அளித்தனர். இக்கிராமத்தின் ஊராட்சி தலைவராக கீதா என்பவர் செயல்பட்டு வரும் நிலையில் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தின் போது கிராம தேவைகள் குறித்து தலைவரிடம் கேட்டால், அவரது கணவரான மோகன் தலையிடுவதோடு. உங்கள் ஊருக்கு எந்த வேலையும் செய்ய முடியாது என ஒவ்வொரு கூட்டத்திலும் மிரட்டும் தொனியிலேயே பேசுகிறார்.

தமிழக அரசு ஊராட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு கொடுத்த சமவாய்ப்பை பயன்படுத்த விடாமல், அவரது கணவரே ஊராட்சி தலைவர் போல் செயல்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இக் கிராமத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் போட்டு கிட்டங்கிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நாள்தோறும் வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.

ஆனால், ஊராட்சி தலைவியின் கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணிகளை எனக்குத்தான் தர வேண்டும் எனவும், இல்லையென்றால் இங்கு எந்த தனியார் நிறுவனமும் செயல்படவும் விடமாட்டேன் எனவும் மிரட்டுகிறார். மேலும், கட்டடத்திற்கு தேவையான கட்டுமான பொருள்கள் அனைத்தும் நானே ஏற்பாடு செய்வேன். இக்கிராமத்தில் உள்ள ஒரு சில படித்த நபர்களை மூளைச்சலவை செய்து அடியாட்கள் போல் அவருக்காக எங்களை மிரட்டவும் தூண்டி விடுகிறார்.

இதனால் கிராமத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்பதால் பொருளாதார அடிப்படையில் முன்னேறவிடாமல் தடுத்து வருகின்றனர். ஊராட்சி தலைவி கீதா பதவியை தவறாக பயன்படுத்தி, தங்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பை தடுப்பதோடு, கிராமத்து தேவைகளை கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டி வரும் மோகன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.