திருவள்ளூர் அருகே கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகள் பிரிந்து வாழந்த நிலையில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்ததால் ஆத்திரம் : மனைவி மற்றும் மகளை வெட்டிய கணவன் கைது

பதிவு:2022-07-05 16:21:39



திருவள்ளூர் அருகே கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகள் பிரிந்து வாழந்த நிலையில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்ததால் ஆத்திரம் : மனைவி மற்றும் மகளை வெட்டிய கணவன் கைது

திருவள்ளூர் அருகே கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகள் பிரிந்து வாழந்த நிலையில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்ததால் ஆத்திரம் : மனைவி மற்றும் மகளை வெட்டிய கணவன் கைது

திருவள்ளூர் ஜூலை 05 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (23). இவரது தாய் மஞ்சுளா (48) வுக்கும் தந்தை சந்திரன் என்கிற சேட்டு (52) என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீயின் தாயார் மஞ்சுளா திருவள்ளூர் நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, தாயார் மஞ்சுளாவுடன் தந்தைக்கு எதிராக மகள் ஜெயஸ்ரீ ஆஜரானதால் தந்தை சந்திரன் என்கிற சேட்டு. முறைத்துக் கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2-ந் தேதி இரவு 8 மணியளவில் ஜெயஸ்ரீயும் அம்மா மஞ்சுளா, அத்தை லட்சுமி ஆகியோர் வீட்டருகே பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த தந்தை சந்திரன் (எ)சேட்டு மகளையும், மனைவியையும் அசிங்கமாக திட்டிக் கொண்டு,என் மேலேயே கேஸ் போடுறீங்களா என சத்தம் போட்டுள்ளார்.

அப்போது சந்திரன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயஸ்ரீயின் தலையில் வெட்டியுள்ளார். அப்போது தாய் மஞ்சுளா தடுத்த போது தன் அம்மாவை பார்த்து, தகாத வார்த்தைகளால் பேசி, நீ செத்தால் தான் நான் இந்த ஊரில் இருக்க முடியும் எனக் கூறியவாறு சரமாரியாக தலை, கை, கால் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் சந்திரனை பிடிக்க முற்பட்ட போது, உங்கள் அனைவரையும் வெட்டி விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து ஜெயஸ்ரீயின் சகோதரர் விக்னேஷ் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆட்டோ மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தாய் மஞ்சுளா மற்றும் மகள் ஜெயஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகள் ஜெயஸ்ரீ திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திதரதாசன், மற்றும் தாலுக்கா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் மனைவி மற்றும் மகளை வெட்டிவிட்டு தப்பியோடியதாக வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்த சந்திரன் என்கிற சேட்டுவை தாலுக்கா காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.