திருவள்ளூரில் திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.கவினர் உண்ணாவிரதப் போராட்டம்

பதிவு:2022-07-06 14:25:38



திருவள்ளூரில் திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.கவினர் உண்ணாவிரதப் போராட்டம்

திருவள்ளூரில் திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.கவினர் உண்ணாவிரதப் போராட்டம்

திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க சார்பில் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றாத மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்மன் மகேந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ் மற்றும் லயன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் ஆனந்த பிரியா, மாநில அலுவலக செயலாளர் ஜெ.லோகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

அப்போது, திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருகிறது. மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும், மனசாட்சி இல்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து பா.ஜ.கவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ்.ரகு, மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம், பாலாஜி, நிர்வாகிகள் பாண்டுரங்கன், சதிஷ்குமார், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.