திருவள்ளூரில் நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் பணப்பயன்கள் பெறுவதில் உள்ள குளறுபடிகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-07-06 14:27:44

திருவள்ளூர் ஜூலை 06 : நலவாரிய குளறுபடிகளை கண்டித்து ஆட்டோ முறைசாரா தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.நடேசன், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜே.ராபர்ட் எபிநேசர், பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சுமதி, ராமசாமி, விசைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பிருந்தாவனம், மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுமானம், ஆட்டோ, தையல், கைத்தறி, சுமைப்பணி, சாலையோர வியாபாரிகள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள், நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்கின்றனர்.புதுப்பித்தலும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.இதனால் ஏகப்பட்ட அளவிற்கு குளறுபடிகள் நடைபெறுகிறது. இதனால் பணப்பயன்கள் பெறுவதிலும் குளறுபடிகள், காலத்தாமதம் ஏற்படுவதால் உடனுக்குடன் சீரமைக்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல் முடிந்தவுடன் அட்டை உடனடியாக தொழிலாளிக்கு கிடைக்க வேண்டும், கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களின் முத்தரப்பு குழுக்களை உடனடியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.