பதிவு:2022-07-06 14:30:16
கூவம் கிராமத்தில் உள்ள தொண்டைமான் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனமர் திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூவம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு தீண்டாதிரி மேனி திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சனையாக நடைபெற்றது, முன்னதாக கடந்த 04.07.22 அனுக்ஞை கோ பூஜையும், ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீமஹாலஷ்மி ஹோமம், ஸ்ரீநவகிரக ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து மாலை மூன்றாம் கால யாக பூஜை ஹோமம், நாடி சந்தானம், மற்றும் தீபாரானையும் நடைபெறுகிறது.
அதனையடுத்து இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்கினத்தில் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தகர் சுவாமி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் மற்றும் தீர்த்தப் பிரசாத விநியோகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது ராஜகோபுரம் மற்றும் அதன் ஒட்டி உள்ள உப கோபுரங்களுக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுரங்கள் உச்சியில் அமைந்துள்ள கலசங்கள் மீது உற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனையடுத்து அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் லட்சுமணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர், இந்த கும்பாபிஷேக விழாவை காண திருவள்ளூர்,காஞ்சிபுரம்,சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து திரிபுராந்தகேஸ்வரர் வழிபட்டு சென்றனர்.