6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மூன்று வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-07-06 14:33:04

திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மூன்று வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி வட்டார இயக்க மேலாளர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் குறித்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.28 வயதிற்குள் இருக்க வேண்டும்.முன் அனுபவம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். இருப்பிடம் திருவள்ளுர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

அதேபோல் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.முன் அனுபவம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.இருப்பிடம் சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், இணை இயக்குநர்,மகளிர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம்.என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை 15.07.2022-க்குள் அனுப்பி பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.