அம்பத்தூர் தொழில்பேட்டையில் வடமாநில தம்பதியரின் 4 சிறுவன் பாழடைந்த மாநகராட்சி தண்ணீர் சேமிப்பு கிணற்றில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு

பதிவு:2022-07-07 20:41:42



அம்பத்தூர் தொழில்பேட்டையில் வடமாநில தம்பதியரின் 4 சிறுவன் பாழடைந்த மாநகராட்சி தண்ணீர் சேமிப்பு கிணற்றில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு

அம்பத்தூர் தொழில்பேட்டையில் வடமாநில தம்பதியரின் 4 சிறுவன் பாழடைந்த மாநகராட்சி தண்ணீர் சேமிப்பு கிணற்றில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு

திருவள்ளூர் ஜூலை 07 : சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை கச்சினாங்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட புருஷோத்தமன் தீனத் தம்பதியரின் 4 வயது மகன் பிரின்ஸ் வீட்டின் எதிரே உள்ள சென்னை மாநகராட்சி மண்டலம் 7 உட்பட்ட மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பாழடைந்த தண்ணீர் சேமிப்பு கிணறு ஒன்று பாழடைந்த நிலையில் பல நாட்களாகவே பயன்பாட்டில்லாமல் கிடைக்கிறது.

வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரின்ஸ் தண்ணீர் தொட்டியின் இருக்கின்ற இடத்தில் விளையாடுவதற்காக சென்று இருக்கிறான் சிறுவன் சென்றதே கண்டும் காணாமல் இந்த தகப்பன் புருஷோத்தமன் வீட்டில் இருந்தபோது கிணற்றிடத்தில் சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது போது பாழடைந்த கிணற்றில் உடைந்த ஓட்டையின் வழியாக தவறி உள்ளே விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மீட்பு படையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான மீட்பு படையினர் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்த பிரின்ஸ்ன் உடலை மீட்டு தொழிற்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையின் தாய் தீனத்துக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் அவர் எக்மோர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் சிகிச்சையில் உள்ளதாகவும். குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது தந்தை புருஷோத்தம குமார் வீட்டில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

தந்தையின் கவனக்குறைவால் குழந்தை தவறி விழுந்தானா என்கிற கோணத்திலும் தொழிற்பேட்டை போலீசார் மேலும் குழந்தையை யாரேனும் எடுத்து சென்று கிணற்றில் வீசினார்களா குழந்தை தானாகவே சென்று விளையாடிக்கொண்டிருந்த பொழுது தண்ணீர் தொட்டியில் உள்ளே தவறி விழுந்துவிட்டதா என்கிற கோணத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருவள்ளுவர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.