பதிவு:2022-07-07 20:43:48
திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியம் போட்டி : பொது மக்கள் கண்டு ரசித்தனர்
திருவள்ளூர் ஜூலை 07 : திருத்தணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாட்டுப் போட்டி மற்றும் சுவர் ஓவியப் போட்டி நடைபெறும் என திருத்தணி நகர் மன்றத் தலைவர் சரஸ்வதி பூபதி. நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச் சூழலை பாதுகாப்பது, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி திருத்தணி நகராட்சி சார்பில் பாட்டு மற்றும் சுவரம் ஓவியப் போட்டி நடத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருத்தணி நகர் மன்றத் தலைவர் சரஸ்வதி பூபதி அழைப்பு விடுத்திருந்தார். அதன் படி திருத்தணி நகராட்சி அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் என் குப்பை என் பொறுப்பு, கழிவுகளை பிரித்தல், நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை, மரம் வளர்ப்பின் அவசியம் உள்ளிட்டி தலைப்புகளில் சுவர் ஓவியங்களை மாணவ மாணவிகள் ஆர்வமுடம் வரைவதை நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
அதே போல் திருத்தணி பேருந்து நிலையத்திலும் கழிவறை சுவற்றிலும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் ஓவியங்களை வரைந்து வருவதை பயணிகள், பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.