திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-07-07 20:49:16



திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் ஜூலை 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தடகளம், நீச்சல், பூப்பந்து,பளுதூக்குதல், கூடைப்பந்து, வளைகோல்பந்து, கபாடி. கையுந்து பந்து, கால்பந்து மற்றும் டென்னிஸ் (இருபாலருக்கும்) 21.07.2022 முதல் 23.07.2022 வரையிலான மற்றும் 25.07.2022 ஆகிய நாட்களில் காலை 7 மணி முதல் தொடங்க உள்ளது.

அதன்படி வரும் 21.07.2022 அன்று தடகளம், கபாடி,கால்பந்து ஆகிய போட்டிகளும்,22.07.2022 அன்று வளைகோல்பந்து,கையுந்து பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கம், திருவள்ளூர் காலை 7 மணிக்கும், 23.07.2022 அன்று பளுதூக்குதல் போட்டி சென்னை 3,நேரு விளையாட்டு அரங்கத்தில் காலை 8 மணிக்கும்,டென்னிஸ்,நீச்சல் போட்டிகள் முகப்பேரில் உள்ள டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் காலை 7 மணிக்கும், 25.07.2022 அன்று பூப்பந்து போட்டி சென்னை 19, திருவொற்றியூரில் உள்ள அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானம்.பூந்தோட்ட தெரு, தேரடி மெட்ரோ இரயில் நிலையம் அருகில் காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரும் 31.12.2021 அன்று 25 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.இதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.மாவட்ட அளவிலான கூடைப்பந்து. வளைகோல்பந்து, கபாடி,கையுந்து பந்து, கால்பந்து மற்றும் பூப்பந்து (இருபாலருக்கும்) ஆகிய குழு விளையாட்டு போட்டியில் தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிக்கு கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட அளவிலான குழு போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம்,மதிப்பு சான்றிதழ், மாற்றுச்ச்சான்று நகல்களை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும்.சான்றிதழை சமர்பிக்காதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட அளவிலான போட்டியில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.இதில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் தங்களுடைய மொபைலில் Play Store ல் சென்று TNsports! ஆடுகளம் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் தகவல்களை பதிவு செய்தல் வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் சொந்த மாவட்டத்திற்காகவோ,பணிபுரியும் மாவட்டத்திற்காகவோ,பள்ளி கல்லூரியில் பயிலும் மாவட்டத்திற்காகவோ விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.பணிபுரிவோர் அடையாள சான்று,பள்ளி,கல்லூரியில் பயில்வோர் படிப்பு சான்று மற்றும் இரண்டு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் நேரடியாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தனிநபர் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெறும் அணி வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000,ரூ.750 மற்றும் ரூ.500 ம் பரிசுத்தொகை வழங்கப்படும். பரிசுத் தொகை நேரிடையாக வங்கியில் செலுத்தப்படவுள்ளதால் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவர்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தனிநபர் போட்டியில் பங்கு கொள்ள உள்ள வீரர் வீராங்கனைகள் மற்றும் மேலாளர்கள் ஆகியோருக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் 19.07.2022 அன்று மாலை 5 மணி வரை. மேலும், தகவல்களை பெற தொடர்புக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.