பதிவு:2022-07-07 20:53:11
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 எஸ்.ஐ., 24 தனிப்பிரிவு காவலர்கள் அதிரடி மாற்றம் : எஸ் பி. பகேர்லா செபாஸ் கல்யாண் உத்தரவு
திருவள்ளூர் ஜூலை 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக பகேர்லா செபாஸ் கல்யாண் கடந்த மாதம் பொறுப்பேற்றார்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி திருவள்ளூர் ஊத்துக்கோட்டை கும்மிடிப்பூண்டி பொன்னேரி என ஐந்து காவல் கோட்டங்கள் உள்ளன.
இந்த ஐந்து கோட்டங்களில் பல ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனி பிரிவு காவலர்களை மாற்றம் செய்ய எஸ் பி முடிவு செய்தார்.குற்றச் சம்பவங்களை தடுக்க காவலர்களை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுப்பதுண்டு.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 14 சப்-இன்ஸ்பெக்டர்களும் 24 தனிப்பிரிவு காவலர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவை திருவள்ளூர் எஸ் பி பிறப்பித்தார்.