திருவள்ளூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

பதிவு:2022-07-09 11:50:18

திருவள்ளூர் ஜூலை 08 : திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். இந்திய ஓடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் சட்டமேதை அம்பேத்கருக்கு முன்னோடியாகவும், சக பயணியாகவும் இருந்தவர் இரட்டை மலை சீனிவாசன். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இறுதி வரையில் உழைத்த இரட்டை மலை சீனவாசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், ஆ.பாலசிங்கம், சித்தார்த்தன், ஜார்ஜ்முல்லர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.