திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது

பதிவு:2022-07-09 11:52:22



திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது

திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் : ஒருவர் கைது

திருவள்ளூர் ஜூலை 8 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று திருத்தணி - பொதட்டூர்பேட்டை சாலை நெடுங்கல் அருகில் காவல் ஆய்வாளர் சுந்தரம்பாள் தலைமையில், உதவி ஆய்வாளர் நந்தினி உஷா, தலைமைக் காவலர்கள் திருப்பதி, செந்தில்குமார், புஷ்பராஜ், டேவிட் சந்தானம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் ஏழை எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. ரேசன் அரிசியை கடத்தி வந்தது வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா சஞ்சீவி ராயபுரம், பிரம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரது மகன் சின்னராஜ் (24) என்பது தெரியவந்தது. மேலும் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி அதை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. ஒரு டன் 100 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்ற சின்னராஜை கைது செய்து அவனிடமிருந்து அரிசி மற்றும் மினி வேனையும் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் 100 கிலோ ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்த மினிவேனை திருவள்ளூர் அலுவலகத்தில் ஒப்படைத்து, ரேசன் அரிசியை கடத்திய சின்னராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.