திமுக பிரமுகர் திருவள்ளூர் எம்.எல்.ஏ வின் பெயரைச் சொல்லி மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்

பதிவு:2022-07-09 11:54:39

திருவள்ளூர் ஜூலை 8 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் என்பவருடைய மகன் வெங்கடேசன் இவரது பூர்வீக சொத்தானது ஒரு ஏக்கர் 9 சென்ட் நிலம் உள்ளது. தற்போது அரசு பதிவேட்டில் பி எல் என குறியீடு செய்துள்ளதாகவும் அந்த நிலத்தை அதே பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அந்த நிலத்திற்கு வரி செலுத்தவும் தங்களது பெயரில் மாற்றவும் சென்றால் அதே பகுதியில் ஒன்றிய கவுன்சிலரும் திமுக பிரமுகருமான பிரபாகர் என்பவர் தங்களை தடுக்க முயல்கிறார் என்றும், நீங்கள் முதலமைச்சரிடம் போனாலும் சரி எங்க போனாலும் சரி நான் திருவள்ளூர் எம்.எல்.ஏ வை வைத்து பார்த்துக் கொள்வேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட வெங்கடேசன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் எங்களது பூர்வீக சொத்திற்கு நான் வரி செலுத்துகிறேன் அதற்கு எங்களுக்கு மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து சென்றார்.