பதிவு:2022-07-09 12:06:33
திருவள்ளூரில் சாலை விபத்துக்களை தடுக்க கடைப்பிடிக்க வேண்டியது குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் சகாதேவன் இருசக்கர வாகன ஓட்டிகள்,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது அதிக வேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலை வளைவுகளில் வாகனங்கள் முந்தி செல்லக்கூடாது
போக்குவரத்து சிக்னல்களை மதிக்க வேண்டும். சாலை விதிகளையும் போக்குவரத்து விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது போன்றவற்றை எடுத்துக் கூறி அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றிய கையில் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர் ஏற்படுத்தினார் .