பதிவு:2022-07-09 12:10:01
ஆர்.கே.பேட்டை ராஜநகரம் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதரத்தை பறித்து, வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தலித் மக்கள் முன்னணி அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் : இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்பு
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 100 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்பிரச்சனையில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டது.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் ஆதிதிராவிடர் மக்களுக்கு நிள அளவீடு செய்து கல் நட்டனர். இதனை மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்கள் அளவீடு கல்லை பிடிங்கு எறிந்தனர், இது சம்மந்தமாக மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடந்த போரட்டத்தில் ஆர்.கே.பேட்டை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினரை கடுமையாக தாக்கப்பட்டனர்.இச்சம்பவத்தை கண்டித்து தலித் மக்கள் முன்னணி அமைப்பினர் திருத்தணியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலித் மக்கள் முன்னணி அமைப்பின் மாநில தலைவர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்துக்கொண்டு பேசினார்.
அப்போது, ராஜாநகரம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் 30 ஆண்டுகளாக நிலத்திற்காக அகிம்சை வழியில் போராடி வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில, மனித உரிமை ஆணையத்திடம் வழக்கு தொடருவோம் என ஆவேசத்துடன் தெரிவித்தார். இந்த ஆர்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.