திருவள்ளூரில் ஆட்டோ சவாரிக்கு அழைப்பது போல் நூதன முறையில் பெண்ணின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயின் பறிப்பு : கொள்ளைனை போலீசார் தேடி வருகின்றனர்

பதிவு:2022-07-09 12:14:06

திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாருதி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப். ஆட்டோ டிரைவரான இவரது மனைவி கதீஜா (38) . நேற்று பிற்பகல் தனது பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக தனது ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்திவைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஷெரீப் சென்றுள்ளார்.

அப்போது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஷெரீப்பின் மனைவி கதீஜாவிடம் அடையாளம் தெரியாத நபர் இரு சக்கர வாகனத்தில் வந்து ஆட்டோ சவாரிக்கு வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கணவர் வெளியில் சென்றிருப்பதாக கதீஜா கூறியுள்ளார். அதற்கு, உங்கள் கணவன் என் நண்பர் தான் என்றும் போன் செய்து தருமாறு கூறியதால் கதீஜாவும் கணவருக்கு போன் செய்து கொடுத்த போது, வெளியில் இருப்பதால் வர இயலாது என ஷெரிப் தெரிவித்துள்ளார்.

அப்போது கதீஜாவிடம் போனை கொடுப்பது போல் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டார். இது குறித்து கதீஜா திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆட்டோ சவாரிக்கு அழைப்பது போல் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.