திருவள்ளூரில் ரூ.4.73 லட்சம் மதிப்பில் 6 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்கள் : பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார்

பதிவு:2022-07-12 15:32:16

திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு 4 லட்சத்து 73 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது. மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

2021- 2022 நிதி ஆண்டிற்கு பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் 6 பயனாளிகளுக்கு 4 லட்சத்து 73 ஆயிர்தது 100 ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கப்பட்டது.

பூவிருந்தவல்லி தொகுதிக்குட்பட்ட காக்களூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.குமார், கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரகுநாதன், கொட்டாமேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், அருந்ததிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, சோரஞ்சேரியைச் சேர்ந்த ஈஸ்வரி, பாரிவாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகிய மாற்றுத் திறனாளிகள் 6 பேருக்கு இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஒன்றிய திமுக செயலாளர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ச.பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.