இருளஞ்சேரியில் 3 தலைமுறையாக வாழ்ந்து வருபவர்களை காலி செய்ய சொல்வதால் செய்வதறியாது தவிப்பு : வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

பதிவு:2022-07-12 15:40:28

திருவள்ளூர் ஜூலை 12 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மின் இணைப்பு, குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, இலவச வீ்ட்டுமனைப் பட்டா போன்றவை வேண்டி நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில் இவையெல்லாம் ஒவ்வொன்றாக வரக் கூடிய சூழ்நிலையில் வருவாய்த்துறை சார்பில் வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டிஸ் கொடுத்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினக்கூலி அடிப்படையில் 3 தலைமுறையாக வாழ்ந்து வரும் தங்களை திடீரென காலி செய்ய சொல்வதால் செய்வதறியாது தவிப்பதாகவும், அதே கிராமத்தில் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருளஞ்சேரி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் கலைந்து சென்றனர்