பதிவு:2022-07-13 20:32:33
திருப்பாச்சூர் பகுதியில் டாட்டா சுமோவில் 3 வாலிபர்கள் அதிவேகத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வைரல் : திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் டாட்டா சுமோவில் மீது ஆபத்தான முறையில் அமர்ந்தும் நின்று கொண்டும் 3 வாலிபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இதில் இரண்டு வாலிபர்கள் காரின் பக்கவாட்டில் கம்பியை பிடித்து நின்று கொண்டும் மற்றொரு வாலிபர் காரின் பேனட் மீது கால் மேல் கால் போட்டு சினிமா பானியில் அமர்ந்து கொண்டு அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் காரில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ வைரலானது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இது போன்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாகசங்களை திருவள்ளூர் பகுதிகளில் ஒரு சில இளைஞர்கள் கார் பைக் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர் இதை உடனடியாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது இந்த ஆபத்தான சாகசங்களால் ஒரு சில நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.