திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 3 வார்டு உறுப்பினர்கள் என 5 பதவிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்தார்

பதிவு:2022-07-13 20:34:57

திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர், பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் - மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் -3 பேர் என 5 பதவியிடங்கள் காலியாக இருந்தது.

காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதனையடுத்து இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி பள்ளிப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 பேரும்,பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு - 2 பேரும், பூந்தமல்லி ஒன்றியம் அகரமேல் வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், மீஞ்சூர் ஒன்றியம் மெதுார் வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் சோழவரம் ஒன்றியம் நல்லுார் வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் என 5 இடங்களுக்கு, 18 பேர் போட்டியிட்டனர்.

இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடைபெற்ற சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பள்ளிப்பட்டு ஒன்றிய குழு உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ச.கி.சேகர் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தேர்தலில் 422 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அகரமேல் வார்டு உறுப்பினராக கி.ராமச்சந்திரனும், மெதூர் வார்டு உறுப்பினராக ச.சீதாராமனும், நல்லூர் வார்டு உறுப்பினராக கோ.செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால் அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.