பதிவு:2022-07-13 20:37:20
வீட்டு அருகே நின்றுக்கொண்டிருந்த இளைஞரை இரு சக்கர வாகனத்தில் கடத்தி கொலை முயற்சி : கஞ்சா போதையில் ரவுடிகள் அசந்த நேரத்தில் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பி காவல் நிலையத்தில் தஞ்சம்
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் ( 21) . இவர் தனது வீட்டு அருகே தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்ற பில்லா மற்றும் அவனது கூட்டாளிகளான இருவர் சஞ்சய் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தாமரைபாக்கம் அடுத்த புன்னப்பாக்கம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் அவரை அமர வைத்துள்ளனர்.
அதனையடுத்து.மற்றொரு கூட்டாளியை வீடியோ காலில் வர வைத்து இவரா என பார் என சொல்லி அவரை கைப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளனர். அப்போது கையில் வெட்டிய ரத்தம் வெளியே வந்ததை சாப்பாட்டில் பிடித்து ரத்த சாப்பாடு சாப்பிட சொல்லி அவரை துன்புறுத்து உள்ளனர். இந்த நிலையில் கஞ்சா போதையில் இருந்த இருவர் போதை தலைக்கேறி அங்கேயே படுத்ததால் அந்த இளைஞர் அவர்களிடமிருந்து தப்பி வெங்கல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் .
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர்கள் வீட்டு அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது தன்னை கடத்தி மாற்று சமூகத்தை சேர்ந்தவர் இவரா என வீடியோ காலில் வந்த மற்றொரு நபரிடம் கேட்டு தன்னை தாக்கியதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். வெட்டு காயம் அடைந்த இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது போலீசார் வருவதை கண்டு ஓட்டம் பிடித்தவரை துரத்தி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு அருகே நின்று கொண்டிருந்த இளைஞரை கடத்தி கொலை முயற்சி செய்தது திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.