பதிவு:2022-07-13 20:43:24
பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் ஆடிப்பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் :
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலில் வரும் 15 ம் தேதி முதல் தொடர்ந்து 14 வாரங்கள் ஆடிப்பெருவிழா நடைபெற உள்ளது.விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் ஆடிப்பெருவிழா முன்னேற்பாடு பணிகள்,குடிநீர்,உணவு ஏற்பாடுகள்,மின் வசதி,போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கலந்தாலோசனைக்கப்பட்டது.
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார்,இந்து அறநிலையத்துறை (வேலூர்) இணை ஆணையர் சி.லட்சுமணன்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,அறநிலையத்துறை,வருவாய்த்துறை,காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.