அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பதிவு:2022-07-13 20:59:10

திருவள்ளூர் ஜூலை 13 : அண்ணா திமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதனை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூரில் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் நரேஷ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தர்மேஷ், மற்றும் வளையாபதி, நேசன், சுந்தரேசன், முத்து, புருஷோத், விஜி, தர்மா, பிரகாஷ்,. ரவி, சீனு, ஜெய் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று கொண்டாடினர். அப்போது நிரந்தரப் பொதுச் செயலாளர் வாழ்க வாழ்க என கோஷமிட்டு மகிழ்ந்தனர்.