பதிவு:2022-07-15 15:23:20
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற செஸ் போட்டிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் துவக்கி வைத்து,செஸ் போட்டியில் பங்கேற்று, மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற செஸ் போட்டிகளை பார்வையிட்டு,ஆய்வு செய்தார்.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்ம ராவ்,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளைகோல் பயிற்றுநர் ஆனஸ்ட்ராஜ், திருவள்ளூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு கழகத்தின் செயலாளர் பலராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.