திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் :

பதிவு:2022-07-15 15:28:01



திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் :

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் :

திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா வருகிற 21.07.2022 முதல் 25.07.2022 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.அப்பொழுது செய்தியாளர் சந்திப்பில் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிகிருத்திகை தெப்பவிழா வருகின்ற 21.07.2022 முதல் 25.07.2022 வரை நடைபெறவுள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் குடிநீர், அவர்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடு வசதிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.ஒட்டுமொத்தமாக தடையில்லா மின்சாரம், போக்குவரத்து, முடி எடுப்பதற்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்துக்கான பேருந்து நிலையம், இரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்தும் சரியான முறையில் கிடைக்கத்தக்க வகையில் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் முடிவெடுத்து, வருகின்ற 21.07.2022 முதல் 25.07.2022 வரை நடைபெறவுள்ள ஆடிகிருத்திகை தெப்பவிழா சிறப்பான முறையில் எந்தவித சிறிய அசம்பாவிதமும் இன்றி, பக்தர்களுக்கு குறைவில்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு இக்கூட்டம் நடைபெற்றது.

கடந்த காலத்தில் 3 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது பக்தர்களுக்காக மேலும் கூடுதலாக இரண்டு பேருந்துகள் சேர்த்து 5–க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் அவர்கள் ஏற்கனவே அங்கு மருத்துவ வசதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். கோவில் மலையில் மருத்துவமனையும் இயங்கி வருகிறது. மேலும் கோவிலுக்கு பல இலட்சம் பக்தர்கள் வருகை புரிவதால் மருத்துவ வசதிகள் பெறுகின்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளன என பால்வளத்துறை அமைச்சர் கூறினார்,

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, திருத்தணி நகர்மன்ற துணைத் தலைவர் சாமிராஜ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.