பதிவு:2022-07-15 15:30:01
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனாவிலிருந்து பூரண குணமடைய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுதல் :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனாவிலிருந்து பூரண குணமடைய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுதல் : திருவள்ளூர் ஜூலை 15 : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றார். இந்நிலையில் தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனால் பொது மக்களின் அடிப்படை வசதிகள், அத்தியாவசியத் தேவைகளுக்காக நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை தொடர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுவதாக அதன் நிறுவனத் தலைவர் சா.அருணன் தெரிவித்துள்ளார்.