பதிவு:2022-07-17 17:20:47
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் :
திருவள்ளூர் ஜூலை 16 : திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் கு.காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா மற்றும் காமராஜரின் ஆட்சி முறை குறித்த கருத்தரங்கம் திருவள்ளூரில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவரும், திருவள்ளூர் நகர் மன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் வி.இ.ஜான் வரவேற்க, சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் தேவயானி ஹரிஹரன் கலந்து கொண்டு காமராஜரின் ஆட்சி முறை குறித்தும், கல்விக்காக அவர் செய்த சாதனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜே.கே.வெங்கடேஷ், மாநில துணை தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன். மாவட்ட பொருளாளர் ஆர்.சசிகுமார், நிர்வாகிகள் ஜே.டி.அருள்மொழி, கோவிந்தராஜ்,டி.வடிவேலு, ஏ.திவாகர், தளபதி மூர்த்தி, எஸ்.எஸ்.சரவணன், பூண்டி ஆர்.ராஜா, விக்டர், ரவிச்சந்திரன், ஏ.அருள், என்.டி.தமிழ், ஜி.பழனி, முகுந்தன், சிவசங்கர், கே.ஜி.புருஷோத்தமன், எம்.கே.மணவாளன், கலீல் ரஹ்மான்,ராமன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.