பதிவு:2022-07-17 17:26:42
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை :
திருவள்ளூர் ஜூலை 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு பா.ஜ.க., ஓ.பி.சி அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் அஷ்வின், மாநில ஓபிசி அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், லயன் சீனிவாசன்,ஜெய்கணேஷ், ஆர்யா சீனிவாசன், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், பாலாஜி, ஓபிசி மாவட்ட தலைவர் சண்முகம் பொதுச் செயலாளர்கள் குமரன், சிவக்குமார், மற்றும் மாநில தொழில்நுட்ப பரிவு செயலாளர் ரகு நகர தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட பாஜகவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்ம வீரர் கல்விக் கண் திறந்த காமராஜரின் 120-வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும், பள்ளியின் தலைமை ஆசிரியருமான இரா.,தாஸ் தலைமை தாங்கி கர்மவீரர் காமரராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆசிரியர் மாலா வரவேற்றார்.
இந்த விழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப் போட்டி நடைபெற்றது. பிறகு மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி தலைமை ஆசிரியர் இரா. தாஸ் பேசினார் அப்போது, கர்ம வீரர் காமராஜர் ஏழை எளிய மாணவர்களின் அழியா கல்வி தீபம் ஏற்றிய ஒளி விளக்கு என்றும் மதிய உணவு தந்த மகத்தான தலைவர் என்றும் தமிழகத்தில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளியை கிராமம் தோறும் திறந்த புனிதன் என்றும் தெரிவித்த அவர், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த தமிழக மறைந்த முன்னாள் முதல்வருக்கு நன்றியையும் தலைமை ஆசிரியரும், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான இரா.தாஸ் தெரிவித்தார்
இதில் ஆசிரியை ஜெயகுமாரி, ரசீதா, திலகவதி, கீதாலட்சுமி, பங்கேற்றனர். ஐ.டி.கே தன்னார்வலர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதே போல் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள வெண்மணம்புதுர் அரசு உயர்நிலைப்பள்ளி யில் கர்ம வீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினராக கடம்பத்தூர் பன்னாட்டு லயன்ஸ் கிளப் செயலாளர் முருகேசன் உறுப்பினர் கள் பூபாலன் கோதண்டராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்பு உரையாற்றினார்.
அதேபோல் பள்ளி மாணவர்கள் காமராஜர் போன்று வேடமணிந்து கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல். மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி ஆனந்தி ராஜம் துர்கேஷ் நந்தினி வேண்டாம் பாய் நாகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் காமராஜர் அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சி பற்றிய கருத்துகளை பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் டாக்டர் எஸ் பாண்டியன் விழா முடிவில் நன்றி கூறினார்.
மேலும் கர்மவீரர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக திருவள்ளூர் என்.ஜி.ஜி.ஓ. காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.சண்முகப்பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது காமராஜர் வேடமணி்ந்து பேச்சு போட்டி பாட்டு போட்டி கட்டுரைப்போட்டி.நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் வீரராகவன். பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியல் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜே.அஸ்மா.மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.