திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் "40 ஆண்டு கோரிக்கைகள் நானிருக்க பயமேன்?" என்று சொன்ன முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் :

பதிவு:2022-07-17 17:29:14



திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் "40 ஆண்டு கோரிக்கைகள் நானிருக்க பயமேன்?" என்று சொன்ன முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்

திருவள்ளூர் ஜூலை 17 : திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் "40 ஆண்டு கோரிக்கைகள் நானிருக்க பயமேன்?" என்று சொன்ன முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் மாவட்ட தலைநகரில் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தேவ அதிசயம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் நாகராஜன்,மதிவாணன், இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன் விளக்க உரையாற்றினார்.

இதில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம்,ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த தொகை ரூ.5 லட்சம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்றும், "40 ஆண்டு கோரிக்கைகள் நானிருக்க பயமேன்?" என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கோஷங்களை எழுப்பியவாறு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.பேரணியை முன்னாள் மாவட்ட தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவன் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாநில செயலாளர் எஸ்.காந்திமதிநாதன்,மாநில துணை தலைவர் க.மணிகண்டன்,மாவட்ட தலைவர் க.திவ்யா,மாவட்ட செயலாளர் இரா.பாண்டுரங்கன், சத்தியமூர்த்தி, க.வெண்ணிலா,ஜெயகர்பிரபு,செந்தில்குமார்,அமுதா,காத்தவராயன்,கோவிந்தன்,யோகராசு,மாவட்ட உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாநில தலைவர் ப.சந்திரம்மாள் நிறைவுரையாற்றினார். இறுதியில் பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.