திருவள்ளூர் இரயில் நிலையம் வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :

பதிவு:2022-07-17 17:32:12



திருவள்ளூர் இரயில் நிலையம் வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :

திருவள்ளூர் இரயில் நிலையம் வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :

திருவள்ளூர் ஜூலை 17 : கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதை தொடர்ந்து திருவள்ளூர் இரயில் நிலையம் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து பேசினார். தமிழக அரசு கொரோனா தொற்றினை தடுக்கும் பொருட்டு 15.07.2022 முதல் 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரை உள்ள மக்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அளிக்க உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான முன்னேற்ற அறிக்கையான, முப்பத்தியொன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 16,14,401 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதினருக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 94.5 சதவிகிதம் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 80.4 சதவிகிதம் ஆகும். 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 15.07.2022 வரை முதல் தவணையாக 99.9 சதவிகிதம், இரண்டாம் தவணையாக 85 சதவிகிதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உள்ளவர்களில் 15.07.2022 வரை முதல் தவணையாக 72,698 தடுப்பூசிகளும், இரண்டாம் தவணையாக 54,216 சிறார்களுக்கும் தடுப்பூசி; செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 59,526 ஆகும். முன்னெச்சரிக்கை தவணை ஊசிக்கான இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய 10,85,338 நபர்களுக்கும், 15.07.2022 முதல் 30.09.2022 வரை நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமாகவும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் அரசு மருத்துவமனைகள் வாயிலாகவும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூஸ்டர் தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முதல் தவணை, இரண்டாம் தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரும் தவறாமல் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதில் திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கு.ரா.ஜவஹர்லால், காவல் துணை கண்காணிப்பாளர் கோ.சந்திரதாசன், இரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ஏ.கே.பிரிட், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.கார்த்திகேயன், திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.