மெய்யூரில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பல்வேறு பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு

பதிவு:2022-07-18 20:44:44



மெய்யூரில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பல்வேறு பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு

மெய்யூரில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பல்வேறு பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு

திருவள்ளூர் ஜூலை 18 : பூண்டி வட்டம், சித்தம்பாக்கம் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்த நெல் பொதுமக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசியாக விநியோகம் செய்வதற்கு ஏதுவாக செயல்பட்டு வரும் தனியார் நவீன அரசி ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் அரவை செய்யும் பணியினையும், மெய்யூர் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை இயந்திரங்களை மட்டும் பயன்படுத்தி ரூ.30,000 மதிப்பீட்டில் கிராமகுளம் தூர்வாரப்பட்டுள்ள பணி உள்ளிட்ட வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக தேசிய வேளாண் நிறுவனத்தை ஆதாரமாக கொண்டு தண்ணீர்குளம். புல்லரம்பாக்கம். தலக்காஞ்சேரி ஆகிய கிராமங்களில் 300 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு அதில் ஒவ்வொரு உறுப்பினரும் ரூ1000 பங்;குத்தொகை செலுத்தி ஈக்காடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள 100 விவசாயிகள் தற்போது இந்நிறுவனத்துடன் இணைக்கபட்டுள்ளனர். இதற்கு சமபங்;கு மானியமாக ரூ 3 இலட்சம் தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்;கி, இத்திட்டத்தில் பங்குபெற்றுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரிடம் கலந்துரையாடினார்.

பின்னர் தண்ணீர்குளம் மற்றும் இதர கிராமங்;களில் காய்கறி உற்பத்தி அதிகமாக உள்ளதால் இவற்றினை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலமாக சேகரிப்பு மையம் ஏற்படுத்தி உழவர் சந்தைகள் மற்றும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.அடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் சித்தம்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் 3000 மெ.டன் அரவைத்திறன் கொண்ட தனியார் நவீன அரிசி ஆலையை திடீராய்வு மேற்கொண்டார். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லினை அரவை செய்து தரமான அரிசி பொது விநியோகத்திட்டங்களின் கீழ் விநியோகம் செய்வதற்கு அனுப்பப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

மேலும் பாரத பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் முலமாக மெய்யூர் கிராமத்தில் தனசேகர் 30 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் வேர்கடலை தோல் உரிக்கும் இயந்திரம் மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் 21 இலட்சம் கடன் உதவி திட்டத்தில் 7 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மானியமாக பெற்று செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வேர்கடலை சந்தை படுத்துதல் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராமங்களின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மெய்யூர் கிராமத்தில் வேளாண்பொறியியல் துறை இயந்திரங்களை மட்டும் பயன்படுத்தி ரூ30,000 மதிப்பீட்டில் கிராமகுளங்கள் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.ஸ்ரீ வீரராகவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலமாக செங்;குன்றம் கிராமத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள பால் குளிருட்டும் இயந்திரம் மற்றும் நெய் தயாரித்தல் தொழிலை பார்வையிட்டு இயக்குநர்களுடன் கலந்துரையாடினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்;களை வெற்றிகரமான தொழில் முனைவோராக்க அறிவுரைகள் வழங்கினார்.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம், வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ராஜேஷ்வரி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜெ.சேகர், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.