கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணதில் தொடர்புடையவர்களை கைது செய்ய முதல்வர் உத்தரவிட்டதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக்கூட்டமைப்பு வரவேற்பு

பதிவு:2022-07-18 20:52:31



கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணதில் தொடர்புடையவர்களை கைது செய்ய முதல்வர் உத்தரவிட்டதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக்கூட்டமைப்பு வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணதில் தொடர்புடையவர்களை கைது செய்ய முதல்வர் உத்தரவிட்டதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக்கூட்டமைப்பு வரவேற்பு

திருவள்ளூர் ஜூலை 18 : மர்மமான முறையில் மாணவி ஸ்ரீமதி இறந்தது வருத்தமும் வேதனை அளிக்கிறது. தவறு இழைத்தவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தது வரவேற்கத்தக்கது அதே நேரத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத்தலைவர் சா.அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள சக்தி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த கிடந்தார் இதனை அறிந்த பெற்றோர்கள் பெற்றோர்கள் நியாயம் கேட்டு கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உடலையும் வாங்க மறுத்து வருகின்றனர் , இந்நிலையில் நேற்று போராட்டம் கலவரமாக மாறி பள்ளி வாகனங்கள் காவல்துறை வாகனங்கள் வகுப்பறைகள் மரங்கள் நாற்காலிகளை உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தி பெரும் வன்முறையில் ஈடுப்பட்டது பெரும் கண்டனத்திற்கு உரியது. வன்முறையை தூண்டிவர்கள் மீதும் வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதே வேலையில் மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார் என பெற்றோர் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து பள்ளி நிர்வாத்தின் மீது நடவடிக்கை எடுக்க போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியது தவறு ,உடனே நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை

அதே நேரத்தில் அரசு பள்ளியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் உடனே சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரச்சனையை சரி செய்ய புகார் தெரிவிக்கும் ஆசிரியர்கள் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்து கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள். இது தொன்றுத் தொட்டு நடந்து வருகிற உண்மை , இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்க விடக்கூடாது

எனவே தமிழக முதல்வர் அவர்கள் மாணவி மரணத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்கிறது மேலும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுப்படவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக்கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.