திருவள்ளூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

பதிவு:2022-07-18 21:20:47



திருவள்ளூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவள்ளூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவள்ளூர் ஜூலை 18 : திருவள்ளூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 6-வது மாநாட்டில் பத்து வருடங்கள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்களை உரிய சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட 11 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது-

திருவள்ளூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க ஆறாவது மாவட்ட மாநாடு,மாவட்ட தலைவர் சந்தானம் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் மெல்கிராஜா சிங் அனைவரையும் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் ரா. சத்தியமூர்த்தி வேலை அறிக்கையினை தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையினை மாவட்ட பொருளாளர் எம். மகேந்திரன் தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலாளர் பாரி மாவட்ட மாநாட்டை தொடங்கி வைத்து துவக்க உரையாற்றினார். இதில் ஊரக வளர்ச்சித் துறை வளர்ச்சி பணி அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் கென்னடி பூபாலராயன் ஓய்வு பெற்ற திட்ட இயக்குனர் ஸ்ரீதர்,மாவட்ட தலைவர் திவ்யா,திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பிரபு, உட்பட பலர் பங்கேற்று வாழ்த்துரை நிகழ்த்தினார்கள் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் ஏகாதேசி,ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் காந்திமதி நாதன் ஆகியோர் கூட்டத்தில் நிறைவு உரையாற்றினார்கள்.

இந்த மாவட்ட மாநாட்டில் பத்து வருடங்கள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்களை உரிய சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ஊராட்சி செயலாளர்களின் மாத ஊதியத்தை முதல் தேதியிலேயே பெறும் வகையில் கருவூலம் மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும், திருவள்ளூரில் அரசு கலை அறிவியல் கல்லூரியும், புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசை மாவட்ட மாநாடு வலியுறுத்துவது உள்ளிட்ட 11 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட துணைத் தலைவர் வீரமணி நன்றி கூறினார்.