திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் மது அருந்த சென்ற போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிப் படுகொலை : செவ்வாப்பேட்டை போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை

பதிவு:2022-07-18 21:26:57

திருவள்ளூர் ஜூலை 18 : திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கலை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் வேலு.(30).வெல்டரான வேலு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த போது பிற்பகல் 2 மணியளவில் செல்போனில் வந்த அழைப்பையடுத்து வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

அதனையடுத்து வேலு மற்றும் அவனது நண்பர்கள் செல்வா (26), கோகுல், , ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரும் செவ்வாப்பேட்டை அடுத்த சிறுகடல் டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக சென்றுள்ளனர்.

டாஸ்மாக் கடைக்கு பின்புறம் கொள்ளமேட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது அப்போது மது போதையில் நண்பர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வேலுவின் நண்பனான செல்வா தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து வயிறு, கை, கால் என சரமாரியாக வெட்டியுள்ளான்.

இதில் சம்பவ இடத்திலேயே வேலு துடிதுடித்து உயிரிழந்தான். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பிரதேத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சென்னையை அடுத்த வில்லிவாக்கத்தில் வசித்து வந்த வேலு, ஐசிஎப் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.