பதிவு:2022-07-18 21:51:54
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து மெட்ரிக் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன
திருவள்ளூர் ஜூலை 18 : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தால் நேற்று அந்த பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்துகள் கொளுத்தி தீக்கிரையாக்கப்பட்டது. அதேபோல் பள்ளி கட்டிடமும் சேதப்படுத்தினர்.
இதனால் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இருப்பினும் அந்தப் பள்ளி சூறையாடப்பட்டதால் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிக்கு இப்போது பாதுகாப்பு வழங்க கோரி இன்று ஒரு நாள் பள்ளிகள் மூடப்படும் என சங்கத்தின் நிர்வாகி தெரிவித்திருந்தார்.
ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆவடி அம்பத்தூர் திருவள்ளூர் பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 354 மெட்ரிக் பள்ளிகளும் 140 சிபிஎஸ்இ பள்ளிகளும் உள்ளது இதில் அனைத்து மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்கள் இன்று வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.
மாவட்ட கல்வித் துறை சார்பில் விடுமுறை அறிவிப்பு வெளியிடாததால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தெரிவித்துள்ளார்.