பதிவு:2022-07-20 09:35:55
திருவள்ளூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் விழா பேருரை அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் நேரலையாக ஒளிபரப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார் :
திருவள்ளூர் ஜூலை 19 : சென்னை கலைவாணர் அரங்கத்தில் “தமிழ்நாடு திருநாள் சூலை – 18” விழா நடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் முகாம் அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றினார்.
இவ்விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் நேரடியாக நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டது. இவ்விழா நிகழ்வை மாவட்ட ஆட்சியரகத்தில் பிரத்யேகமாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் நேரலையாக திரையிட்டு காண்பிக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டார்.
இந்நேரலை ஒளிப்பரப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்காக வருகை தந்த ஏராளமான பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு பணியாளர்கள், ஊழியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பினர்கள் நேரடியாக கண்டு களித்தனர்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சு.சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பத்துறை சார்ந்த பணியாளர்கள், பொதுமக்கள் அரசு அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.