பதிவு:2022-07-20 09:42:50
பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியிலான கேள்வியை மாணவர்களிடம் எழுப்பியதை கண்டித்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஜூலை 19 : பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியிலான கேள்வியை மாணவர்களிடம் எழுப்பியதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட பட்டியலின அணி தலைவர் சந்தோஷ் தலைமையில் ஒருங்கிணைந்த பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவினர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அஸ்வின் குமார், பட்டியல அணி மாநில செயலாளர் செந்தில், மையக்குழு நிர்வாகி லயன் ஸ்ரீனிவாசன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ் திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராகவும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி அடிப்படையிலான கேள்வி கேட்கப்பட்டதற்கு உடனடிாக மன்னிப்புகேடக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்