பதிவு:2022-03-20 23:29:59
சேலத்தில் இருந்து பஞ்சாபுக்கு 5559 குவிண்டால் பருத்தி விதைகள் சரக்கு ரெயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
சேலம்:
தெற்கு ரயில்வேயில் பயணிகள் ரயில்கள் மட்டுமின்றி, சரக்குரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் தெற்கு ரயில்வேயின் வருவாய் அதிகரித்து வருகிறது.
தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தின் வணிக மேம்பாட்டுப் பிரிவின் சார்பாக, இன்று சேலத்தில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவிற்கு சரக்கு ரெயில் மூலம் பருத்தி விதைகள் அனுப்பிவைக்கப்பட்டன.
மொத்தம் 33,341 பைகளில் அடைக்கப்பட்டு, 5559 குவிண்டால் பருத்தி விதைகள், 24 வேகன்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இதன்மூலம் ரெயில்வேக்கு ரூ.30.41 லட்சம் வருவாய் கிடைக்கும்.