பதிவு:2022-07-20 09:53:33
திருவள்ளூரில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபருக்கு சரமாரி அடி உதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
திருவள்ளூர் ஜூலை 19 : திருவள்ளூரில் குடிபோதையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திருவள்ளூர் நகரின் மைய பகுதியில் ஜே என் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பிரியாணி கடைக்கு மேலே நான்கு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு 9 மணி அளவில் அந்த வீட்டிற்குள் யாரோ மர்ம நபர் புகுந்ததால் அந்த வீட்டிலிருந்து கூச்சல் சத்தம் கேட்டுள்ளது.
அதனால் கீழே பிரியாணி கடைக்கு வந்தவர்கள் மற்றும் எதிரே திருப்பதி செல்லும் பேருந்து நிறுத்தும் இடம் ஆகிய பகுதிகளில் இருந்தவர்கள் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் இருப்பதை கண்டதும் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் பெயர் பிரபாகரன் என்பதும் அவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலையில் இருப்பது விசாரணையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.