திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

பதிவு:2022-07-20 14:46:41



திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

திருவள்ளூர் ஜூலை 20 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா வருகிற 21.07.2022 முதல் 25.07.2022 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து பேசினார்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள 21.07.2022 முதல் 25.07.2022 வரையிலான 5 நாட்களில் 24 மணி நேரமும் அறுசுவை உணவு பக்தர்களுக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வழங்கப்படும். பக்தர்கள் நேர்த்தி கடன் செய்கின்ற காவடிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், போக்குவரத்து வசதிகள், போதுமான அளவு கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், அதேபோல் பின்னால் அமைந்திருக்கின்ற திருக்குளத்தைச் சேர்ந்த படிக்கட்டுகள், போக்குவரத்து வசதிக்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்ற இடங்கள் உட்பட பல முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு சொந்தமான வெள்ளித்திருத்தேர் புதிதாக அமைக்கப்படுகின்ற அந்த திருத்தேர் பணிகளையும் தற்போது கலந்தாய்வு செய்திருக்கின்றோம். திருத்தணிக்கு மாற்றுப்பாதை வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை நம் மாவட்ட நிர்வாகத்தோடு மாவட்ட ஆட்சியர் முழுமையாக அதற்கு முழு முயற்சி எடுத்துக்கொண்டு மாற்றுப்பாதைக்குண்டான பணியின் முன்னேற்றம் குறித்தும் இன்று கலந்தாய்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டுகளில் விடப்பட்ட பேருந்துகளை விட 10 – 20 சதவிகிதம் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் விடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்று இரயில்களை சிறப்பு இரயில்காளாக இயக்க வேண்டும் என்று இரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வெப்பத்தை பொறுத்து பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும், பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பக்தர்கள் நலனை முழுமையாக பாதுகாக்கப்படும். அவசர உதவிக்கான எண்ணை வெகு விரைவில் அறிவிக்க இருக்கின்றோம்.இந்த நாட்களில் முடிகாணிக்கை இலவசமாக்கப்பட்டிருக்கின்றது.காவல் பாதுகாப்பு பணிக்காகவும் திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவின் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்களுடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்,மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்தாலோசனைக் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் அறநிலையத்துறை கூடுதல் இயக்குநர் திருமகள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.மீனாட்சி, திருத்தணி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், இந்து சமய அறநிலையத்துறை (வேலூர்) இணை ஆணையர் சி.லட்சுமணன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜே.அஸ்வத் பேகம், திருத்தணி நகராட்சி ஆணையர் ராமஜெயம், துணை ஆணையர் செயல் அலுவலர் பா.விஜயா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.