பதிவு:2022-03-21 21:18:20
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் :
திருவள்ளூர் மார்ச் 21: திருவள்ளூர் நகராட்சி, மணவாளநகர் கே.இ.நடேச செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறை சார்பாக நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார்.
இந்த கூட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பள்ளியின் முன்னேற்றம் என்பது ஆசிரியர்களும், அரசும் மட்டும் சேர்ந்து ஒரு பள்ளியின் தரத்தை உயர்த்துவது என்பது எளிதானதல்ல. எனவே, பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களோடு, அதிகாரிகளோடு இணைந்து செயல்படும்போது தான் அந்த பள்ளி எல்லா விதத்திலும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளியாக முன்னேற வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில் இக்கூட்டம் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு, பள்ளியில் நடைபெறுகிறது.
நீட் தேர்வு வாயிலாக தேர்வாகி மருத்துவ படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு 7.5 சதகிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி, அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் கடந்த வருடம் நமது மாவட்டத்தைச் சேர்ந்த 23 அரசு பள்ளி மாணவர்கள் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து இலவச கல்வியை பெற்று வருகின்றனர். எனவே, பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களோடு பெற்றோர்களும் இணைந்து செயல்படும்போது தான் அம்மாணவர்களின் கல்வி தரம் மேலும் உயரும்.
அதேபோல எந்தவொரு அரசு பள்ளியில் பயின்ற பெண் குழந்தையும் பட்டப்படிப்பு படிப்பதற்கு ரூ.1000–ம் வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை மேன்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவே இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அவர்களில் 75 சதவிகிதம் பெற்றோராகவும், 50 சதவிகிதம் பெண்களாக இருக்க வேண்டும்.அதில் இடம் பெறும் 20 உறுப்பினர்களில், 15 பேர் பெற்றோர்கள், ஒருவர் தலைமையாசிரியர், ஒருவர் உதவி ஆசிரியர், 2 பேர் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒருவர் கல்வி ஆர்வலர் அல்லது அரசு சாரா அமைப்பினர் அல்லது புரவலர் அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியராக இருப்பார்.திருவள்ளூர் மாவட்டத்தில் 943 துவக்கப் பள்ளிகள், 265 நடுநிலைப்பள்ளிகள், 145 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 118 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,471 அரசு பள்ளிகளில் இக்கூட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், திருவள்ளூர் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் டி.வி.அசோகன், சர்வசிக்ஷா அபியான் மேற்பார்வையாளர் லாவண்யா, தலைமையாசிரியர் ஞானசேகரன், தி கேண்டில்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஏஞ்சலின் பிரின்ஸ், தி கேண்டில்ஸ் தொண்டு நிறுவனத்தின் பங்கேற்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.