கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி பதுக்கல் வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது :

பதிவு:2022-07-21 22:26:02



கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி பதுக்கல் வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது :

கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி பதுக்கல் வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது :

திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவிற்குட்பட்ட சுண்ணாம்புக்குளம் அடுத்த பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் ரமேஷ் (38). இவர் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனையடுத்து கடந்த 14.12.20212 அன்று அங்கு சோதனை செய்யப் போவதை அறிந்த ரமேஷ் தலைமறைவானார். இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் ரேசன் அரிசி பதுக்கல் வழக்கில் தலைமறைவாக இருந்த ரமேஷை காவல் ஆய்வாளர் சுந்தரம்பாள் தலைமையில், உதவி ஆய்வாளர் நந்தினி உஷா தலைமைக் காவலர்கள் செந்தில்குமார், புஷ்பராஜ் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அருகே பதுங்கியிருந்த ரமேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.